அதிமுக பிரமுகர் மீது விவசாயிகள் ஒன்றிணைந்து புகார் !!

 

-MMH

   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் பகுதியில் அதிமுக கிளைச் செயலாளர் சாமிக்கண்ணு மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் திமுக கிளைச் செயலாளர் குமார் மீது உள்ளாட்சித் தேர்தலில் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தோடும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவதூறு பரப்பும் நோக்கத்திலும் அரசுக்கும், ஊடகத்திற்கும் பொய்ச் செய்திகளை பரப்பும் நோக்கத்தில் அதிமுக பிரமுகர்கள் செயல்பட்டு வருவதாக அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு.

அப்பகுதியில் நீண்டகாலமாக சாலை வசதி கேட்டு அருகில் உள்ள விவசாயிகள் தங்களுடைய நிலங்களை கொடுத்தும் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் சமயத்தில் அதனைத் தடுக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதாக அதிமுக பிரமுகர் மீது விவசாயிகள் ஒன்றிணைந்து புகார் மனு கொடுத்துள்ளனர்.

-P.ரமேஷ் வேலூர்.

Comments