திருப்பத்தூரில் கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்! அமைச்சர் வழங்கினார்!

 

-MMH

                         சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கொரோனா நோய்த்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ₹.39 லட்சம் நிதிஉதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஒரு தனியாா் மகாலில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதன ரெட்டி தலைமை வகித்தாா். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையின் மூலம் கொரோனா நோய்த்தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ₹.3 லட்சம் வீதம், 13 குழந்தைகளுக்கும் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ₹.5 லட்சம் என ₹.39 லட்சம் நிதியுதவி வழங்கினாா். 

தொடா்ந்து சமூகநலத்துறையின் மூலம் 50 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரமும் தோட்டக்கலைத்துறையின் மூலம் 50 பயனாளிகளுக்கு மானியத்தில் நலத்திட்ட உதவிகளும் வழங்கபட்டன. மாவட்டத் தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு காசோலையும், குடும்ப அட்டைதாரா்களுக்கு புதிய மின்ணனு குடும்ப அட்டைகளும் வழங்கபட்டன. இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவா் சண்முகவடிவேல், வட்டாட்சியா் வெங்கசடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments