கோவையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.!!

  -MMH

   கோவையில் விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்கள் சார்பில் நடத்தப்பட்ட ஒன்பதாம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோகுலாஷ்டமி என்று சொல்லப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டும் கோவை ரத்தினபுரி பகுதியில் 75 வது சுதந்திர தின பவள விழா ஆண்டை ஒட்டியும் கிருஷ்ணர் ஜெயந்தி விழா விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் அமைப்பின் கோவை மாநகர் மாவட்ட செயல் தலைவர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதனையொட்டி கிருஷ்ணர் மற்றும் ராதா வேஷம் அணிந்து வந்த சுட்டிக் குழந்தைகள் காண்போரை வெகுவாகக் கவர்ந்தனர். அப்போது வந்திருந்த குழந்தைகள் வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என தங்கள் மழலைக் குரலில் முழக்கம் இட்டது அப்பகுதியினரை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் கிருஷ்ணர் பற்றி இவ்விழாவில் நடத்தப்பட்ட பிரசங்கத்தை பலர் கேட்டு ரசித்தனர். நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில செயலாளர் லட்சுமண நாராயணன், பாஜகவை சேர்ந்த மாயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments