நான்கு சக்கர வாகனங்களால் ஏற்படும் புழுதி - பாழாய் போன விவசாய நிலங்கள்: கண்டுகொள்ளுமா நகராட்சி..!!

   -MMH

   கோவை மாவட்டம் செட்டிபாளையம் பெரிய குயிலி பகுதியிலுள்ள புளியங்காடு தோட்டம் சாலையில் கற்கள், மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிக அளவில் செல்வதால் சாலை பணி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, வாகனம் செல்லும் பொழுது புழுதிகள் கிளம்பி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்வதாகவும் வேகமாக செல்லும் லாரிகளால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இந்த லாரிகள் செல்லும் பொழுது சரியில்லாத சாலைகளால் அதிக அளவில்புழுதி கிளம்பி அந்தப் பகுதியில் இருக்கும்  விவசாய பூமியை அளிப்பதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை சரி செய்து தர வேண்டும் என்றும் நிகழக்கூடிய விபத்தில் இருந்து மக்களை காக்க வேண்டும் என்றும் விவசாய நிலங்களை பாழாக்கும் இந்த புழுதியிலிருந்து சரி செய்து தர வேண்டும் என்றும் அந்த பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-எல் குமார், ஆரோக்கியராஜ்.

Comments