கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க..ஊர் சுற்ற குதுகளமாய் கிளம்பும் சுற்றுலாப் பிரியர்கள்...!!!

  -MMH

    கொரோன என்று இந்த  வாக்கியம் காதில் ஒழித்தாலே நம் மனதைப் பதப் பதற  வைக்கும் அளவுக்கு நம் அனைவரின்  வாழ்க்கையிலும்  ஒவ்வொரு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது இந்த கொரோன நோய்த்தொற்று. இந்தக் கொடூர  நோய்த் தொற்றால் தீவிரமாக  பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கோவை மாநகரம் அடங்கும் ஆகவே இங்கு ஊரடங்கு சற்று தீவிரமாகவே இருந்தது.

இந்த கொடூர நோயை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது, அதில் முக்கியமான நடவடிக்கையாக முழு ஊரடங்கு பிறப்பித்தது அரசு.

தற்போது நோய்த்தொற்று குறைய  ஆரம்பித்திருக்கும்  நிலையில் அரசு அறிவித்த ஊரடங்கை நோய் கட்டுப்பாடு  விதிமுறைகளின் படி  சுற்றுலா தலங்களுக்கும் அனுமதியளித்துள்ளது . எங்கும் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்கள், குறிப்பாக சுற்றுலாப் பிரியர்கள் கோவை மாவட்ட சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள சிறுவாணி நீர்வீழ்ச்சி, ஆனைகட்டி, பவானிசாகர், ஆழியார் டேம், குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தளங்களில் குவிந்த வண்ணம் இருக்கின்றன, மலைகளின் ராணி என்று அழைக்கக்கூடிய    நீலகிரி மாவட்டத்திற்கு ம் அதிகம் சென்ற வண்ணம் உள்ளனர்.

பக்கத்து மாநிலமான கேரளாவில் இன்னும் நோய்த்தொற்று  தீவிரமாக உள்ள நிலையில்  அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை.

சுற்றுலா தலங்களுக்குச் செல்வது மனதுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியதாகும், நிம்மதியான மனப்பாங்கு, உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி  உடல் ஆரோக்கியம், இயற்கை காட்சிகள்  கண்களுக்கு விருந்து அளிக்கக் கூடியதாகவும் , இன்னும் எண்ணிலடங்கா சந்தோசத்தை தரக்கூடியதுதான் இந்த சுற்றுலாப் பயணம், இருப்பினும் கொரோன நோய்த்தொற்று இன்னும் முழுமையாக  முடிவடையாத நிலையில் மக்கள் பாதுகாப்பாகவும் விழிப்புடனும் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதே  அனைவரின் அன்பு கலந்த கோரிக்கையாக இருக்கிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாட்ஷா, திருப்பூர்.

Comments