பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் அவல நிலையை கண்டுகொள்ளுமா அதிகாரிகள்

    -MMH

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் அவல நிலை வால்பாறையில் அதிக அளவு செல்போன் கைபேசி தொலைத்தொடர்புத் அதிகளவு துண்டிக்கப்படுகிறது. 

பலமுறை பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை அதேபோல் பி.எஸ்.என்.எல் அலுவலகம் மிகவும் பாழடைந்த தரமற்ற நிலையில் உள்ளது. ஏனெனில் அங்கு வால்பாறையில் உள்ள திருடர்கள் அதிகளவு  வசிப்பதாகவும் கூறியுள்ளார்கள்.

இதேபோல் சமீபகாலத்தில் ஒரு குடிபோதையில் உள்ள ஒருவர் அப்பகுதியில் ஒளிந்திருந்து காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு அவரை விரட்டினர். பின்பு பி.எஸ்.என்.எல் அலுவலகம் மிகவும் செடிகள் புதர்கள் போல் காட்சி அளிக்கிறது. பின்பு இரவு நேரத்தில் குடிமக்கள் மது அருந்திவிட்டு அப்பகுதியில் சுற்றித் திரிவதாக காவல்துறைக்கு தெரிவித்தும் காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

பின்பு அப்பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் செல்போன், டவர் கிடைக்காமல் கைபேசி வாயிலாக மக்களுக்கு அவசர நிலையை பரிமாற்றம் செய்வதற்கு இடையூறாக உள்ளது. சிக்னல் கிடைப்பது இல்லாமல் மக்கள் அவதி படுகிறார்கள். இதைகண்டு கொள்ளுமா அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-திவ்ய குமார், வால்பாறையில்.

Comments