கோவையில் வீடுகளை திறந்து வைத்து தூங்குபவர்கள் இல்லங்களை குறி வைத்து திருடும் கும்பலை கைது செய்த போலிசார் !

 

-MMH

  


                  அதிகாலை நேரங்களில் வீடுகளில் செல்போன்களை திருடும்                          கும்பலை கைது செய்த தனிப்படை போலிசார்.  வீட்டில் ஆள்                   இருக்கும்போது திருடும் பரபரப்பு சிசிடிவி காட்சிகளை வெளியீட்ட போலிசார்.


 கோவையில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் கைவரிசை காட்டிய கும்பல் கைது. வெரைட்டி ஹால், குனியமுத்தூர், செல்வபுரம் பகுதிகளில் திருட்டு புகார்கள் அடுத்து போலிசார் தனிப்படை அமைத்து விசாரணை.

தனிப்படை போலிசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை கைது செய்தனர்.  திண்டுகல் மாவடத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி, செளரியம்மாள், ரமேஷ், அந்து ஆகியோர் கைது.


 போலிசார் விசாரணையில் நான்கு பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் அக்காக்கள் திருடும் செல்போன்களை கள்ள சந்தையில் விற்பனை செய்ய தம்பிகள் உதவுவது அம்பலம். 

கோவையில் கடந்த ஆறு மாதமாக பல்வேறு திருட்டு வழக்கில் தேடப்பட்டவர்கள் கைது என போலிசார் தெரிவித்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments