அரசு அலுவலகங்களில் அலட்சியத்தால் ஆர்டிஓ அலுவலகத்தில் கூடிய பொதுமக்களால் நோய்த்தொற்று ஏற்படுமா..!!

 

-MMH 

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி - அலட்சியத்தில் அரசுப்பணியாளர்கள் பொள்ளாச்சி RTO அலுவலகத்தில் சமூக இடைவேளையை கடைபிடிக்காமல் அலட்சியமாய் வேலை செய்யும் சில அரசு பணியாளர்கள். கொரோனா மூன்றாம் அலை பரவ எச்சரிக்கை இருக்கும் நிலையில்  RTO அலுவலகம்  போன்ற பொது இடங்களில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் மக்கள் கூடுகின்றனர்.

நேற்று நடந்த ஓட்டுநர் பயிற்சி தேர்விற்கு வந்த பொதுமக்களை அலட்சியத்துடன் அலுவலர்கள் கையாண்டனர், இத்தகைய செயல் நோய்த் தொற்றுக்கு எளிதாக வழிவகுக்கும்.  அங்கு எந்தவித சமூக இடைவேளையும் கிருமி னாசினியும் களும் அமைக்கவில்லை.

எனவே பொதுமக்கள் கூடும் அரசு அலுவலகங்களில் கிருமி தொற்றை தடுக்கக்கூடிய தடுப்பு மருந்துகளை அமைத்து சமூக இடைவெளியை பின்பற்றியும் அதனை நகராட்சி கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சா.பிரசாந்த். ஈசா.

Comments