கோவையில் மஜக சார்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பூ சிமுகாம்!

-MMH 

      கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னெடுப்பில் கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட  செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பொன்விழா நகர் பள்ளிவாசல் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் சுமார் 400க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர். IKP மாநில செயலாளர் லேனா இஷாக்,  தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், தொழிற்சங்க மாவட்ட தலைவர் அப்துல் சமது, மாவட்ட பொருளாளர் ரியாஸ், காஜா,மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments