கோவையில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது!!.

  -MMH

   கோவை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 27ஆம்  ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மருத்துவ அணி மாவட்ட செயலாளர் சதாம் உசேன் தலைமையில் கோவை வின்சென்ட் சாலையில் உள்ள நல்லாயன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் 200 க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவஹிருல்லா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவினை தொடங்கி வைத்தார், இந்நிகழ்ச்சிக்கு தமுமுக வின் மாவட்ட தலைவர் அஹமத் கபீர், மாவட்டச் செயலாளர் முஜிபூர் ரஹ்மான் ,மாவட்ட பொருளாளர் அப்பாஸ் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த கோவை அரசு மருத்துவமனையில் டீன் நிர்மலா நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். விழாவிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக், பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன், தமுமுக மாவட்ட மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments