மக்கள் பணிக்கு மனம் இருந்தால் போதும்!! சிங்கநல்லூர் உழவர் சந்தையை ஆய்வு செய்து வியாபாரிகளின் குறைகளை கேட்டறிந்தார் முன்னாள் எம்எல்ஏ!!

 -MMH

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் அமைந்துள்ள உழவர் சந்தையை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த பின்பு  வியாபாரிகளின்  குறைகளை கேட்டறிந்தார் முன்னாள் எம்எல்ஏ நா. கார்த்திக் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற முன்னாள் எம்எல்ஏ மற்றும் கோவை மாவட்ட கிழக்கு மண்டல திமுக பொறுப்பாளருமான நா.கார்த்திக் திருச்சி சாலையில் அமைந்துள்ள சிங்கநல்லூர் உழவர் சந்தையை ஆய்வு செய்தார் பின்னர் அங்குள்ள வியாபாரிகள், பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

அப்போது விவசாயிகள் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை அவரிடத்தில் வலியுறுத்தினர். வியாபாரிகளின் சார்பாக உழவர் சந்தையில் மேற்கூரைகள் அமைக்க வேண்டும், கட்டிட பழுதுகளை சரி செய்ய வேண்டும், கிடங்கு அரை கட்டி  தரவேண்டும், பயன்பாடற்ற கிடக்கும் குளிர்பதன கிடங்கை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் , கழிவறைகளை சீரமைக்க வேண்டும் என்ற பல கோரிக்கைகள்   அவரிடம் சொல்லப்பட்டன.  கோரிக்கைகளை கேட்டறிந்த பின்னர்  அனைத்தும் சரி செய்யப்படும் என்று நா.கார்த்திக்  உறுதி அளித்தார்.

 நாளைய வரலாறு செய்திக்காக,

-முகம்மது சாதிக் அலி.

Comments