காயல்பட்டின த்தில் துளிர் "சமூக வழிகாட்டி சேவை மையம்" திறப்புவிழா!!

     தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சமூக வழிகாட்டி சேவை மையம் திறக்கப்பட்டது. இச்சேவைமையத்தில் பெண்கள்,முதியோர், உலமாக்கள் கோவில் பூசாரிகள், சிறுவியாபாரிகள், கலப்புத் திருமணம் செய்து கொண்டோர், பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் மத்திய மாநில அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களை எளிய முறையில் பெறும் வகையில் காயல்பட்டிணத்தில் துளிர் வழிகாட்டி சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.

இச்சேவைமையத்தினை தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் Dr.  சுப்புலெட்சுமி திறந்து வைத்தார்.

காயல்பட்டினம் ஆறுமுகநேரி மேல்நிலைபள்ளி தலைவர் அப்துல் காதர் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் மொஹைதீன் அப்துல் காதர்  முன்னிலை வகித்தார். ஞானசேகரன் வரவேற்புரையாற்றினார். துளிர் வழிகாட்டி சேவை மைய பணிப்பாளர் வக்கீல் அஹமத் துவக்க உரையாற்றினார். துளிர் வழிகாட்டி சேவை மைய தலைமை செயல்பாட்டாளர் சித்தி ரம்ஜான் அறிமுக உரை வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட காஜி அம்ஜத் அலி ஆலிம், திருச்செந்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பொன் ரவி, தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் பெண்கள்  உதவும் சங்கத் தலைவி வஹிதா , வழக்கறிஞர் ரூபன் கிசோர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

துளிர் சமுக வழிகாட்டி சேவை மைய தலைமை செயற்பாட்டாளர் சித்தி ரம்ஜான் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அன்சாரி, நெல்லை.


Comments