நகராட்சி ஆணையர் அச்சுறுத்தல்.! பணிப்பெண் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார்..!!

-MMH


கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் பணிப்பெண் சுமித்ரா ஸ்ரீ வயது 30 ரொட்டிக் கடை பகுதியில் வசித்து வரும் இந்த பெண் 2020இல் தற்காலிகமாக வால்பாறை நகராட்சி சத்துணவு கூடத்தில் கணினி துறையில் பணியாற்றி வருகிறார் இவருக்கு கடந்த 10மாதங்களாக ஊதிய தொகை வழங்கவில்லை ஊதியத் தொகையை சுமித்ரா ஸ்ரீ பெற்றுக்கொண்டதாக எழுதித் தரவேண்டும் என்று மிரட்டி உள்ளார் என்றும் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஊதியத் தொகை சம்பந்தமாக மாநகராட்சி ஆணையரிடம் கேட்டபொழுது பெண்ணென்றும் பாராமல் தகாத வார்த்தையில் பேசியதாகவும் இவர் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும் அச்சுறுத்தும் வகையில், மிரட்டி வருகிறார். என்று வால்பாறை காவல் நிலைத்தில் தனது வழக்கறிஞருடன் தன் உயிருக்கு பாதுகாப்பு கோரி,

தனக்கு வரவேண்டிய ஊதியத் தொகையை வழங்க வேண்டும் என்று தன் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார் காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தனது 2 குழந்தைகளுடன் காவல் நிலையத்தில் தற்கொலை செய்யப் போவதாக கூறியுள்ள அந்தப் பெண் தனக்கு நீதி வேண்டும் என்று முறையிட்டு வருகிறார். இந்த சோக நிகழ்வு வால்பாறை மக்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பணி புரியும் இடத்தில் பெண்கள் பாதுகாப்பு இல்லாத நிலை நமது நாட்டில் அதிக அளவு காணப்படுவது மனவேதனை அளிப்பதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நாளைய வரலாறு. செய்திகளுக்காக,

-திவ்யகுமார், வால்பாறை.ஈசா.

Comments