கோவையில் இந்து முன்னணியினர் சுந்தந்திர தின விழாவை கொண்டாடினர் !!

 

-MMH 

    சுதந்திர தினத்தை முன்னிட்டு சுந்தந்திர போராட்ட வீரரின் வாழ்க்கையை நாடகமாக நடித்து காட்டிய இந்து முன்னணியினர். இந்தியா முழுவதும் 75ம் ஆண்டு சுந்தந்திர தின விழா கொண்டாப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் தேசிய கொடியேற்றி இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் கோவை சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் இந்து முன்னனி அமைப்பினர் சுந்தந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை நாடகாம அரங்கேற்றினர். மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்ற இந்நாடகங்களில் கோவை மத்திய சிறைச்சாலையில் செக்கிழுத்த சுந்ததிர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் நாடகம் அங்கிருந்த மக்களை வெகுவாக கவர்ந்தது. அதுமட்டுமின்றி சிறுவர் சிறுமியினர் சுபாஷ் சந்திரபோஸ், பாரதமாதா போன்றவர்களின் வேடமணிந்து நடித்து காடினர். மேலும் இந்து முன்னனி அமைப்பினர் பாரத் மாயா ஹீ ஜே என்ற முழக்கங்களையுன் எழுப்பினர். 

நாடு முழுவதும் கொடியேற்றி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்து முன்னணியினர் இது போன்று சுந்ததிர போராட்ட வீரர்களின் நாடகத்தை நடத்தி காட்டினார். இதில் இந்து முன்னனி கோட்ட செயலாளர் சதீஷ், செய்தி தொடர்பாளர் தனபால், கோட்ட பேச்சாளர் கிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் லீலா கிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

- சீனி,போத்தனூர்.

Comments