இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது !!

 

-MMH

         தமிழக அண்டை மாநிலமான கேரளாவில் தினசரி கொரோனா  பாதிப்பு 30000 ஆக இருந்து வருகிறது. மேலும் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த அம்மாநில முதல்வர் பிரனாயி விஜயன் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக தெரிவித்துள்ளார் அதன்படி  இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அம்மாநில முதல்வர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Comments