சென்னை அருங்காட்சியத்திற்கு அனுப்பப்பட்ட கோவை போலீஸ் வாகனம்.!!!

   -MMH

    சென்னை அருங்காட்சியத்திற்கு அனுப்பப்பட்ட கோவை போலீஸ் வாகனம்.!!!

கோவை மாவட்ட காவல்துறையின் மோட்டார் வாகனப் பிரிவில், காவலர்கள் அலுவலுக்காக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 1974-ம் ஆண்டு தயாரிப்பான பெட்ஃபோர்ட் என்ற வாகனம் கடந்த 1975-ம் ஆண்டு வாங்கப்பட்டது.

TNE 6000 எனும் பதிவு எண் கொண்ட இந்த வாகனத்தை, 1987-ம் ஆண்டு வரை போலீஸார் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஆண்டுகள் பல கடந்ததாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் பழுதடைந்த அந்த வாகனம் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

இதை அறிந்த கோவை எஸ்.பி. செல்வநாகரத்தினம், அந்த வாகனத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த வாகனம், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, சென்னையில் உள்ள அருங்காட்சியகத்திற்கு அந்த வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-N.V.கண்ணபிரான்.

Comments