கால தாமதம் செய்யாமல் சாலையை சீர்படுத்த வேண்டும்!! - விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை

   -MMH

    பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த குப்புச்சிபுதூர் பகுதியில் இருந்து ஒடையகுளம் செல்லும் கிராம இணைப்பு சாலைகடந்த 6 மாதங்களுக்கு முன்பு தார் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்களை கொட்டி பரப்பிய நிலையில் அப்படியே விட்டுவிட்டனர்.

தற்பொழுது ஜல்லி கற்கள் சாலையின் மேற்பரப்பில் அதிக அளவில் பெயர்ந்து இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் டயரில் கற்கள் பட்டு அடிக்கடி வண்டி பஞ்சர் ஆகி விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

கற்களால் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து காயங்களுடன் சென்றவரும் இருக்கிறார்கள். பயணத்திற்கு ஏற்ற சாலை அல்ல என்பதை உணர்த்தும் வகையில் இந்த சாலை இருப்பதால் கால தாமதம் செய்யாமல் சாலையை சீர்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் இப்பகுதியில் உள்ள விவசாயிகளும் பொதுமக்களும். ஏற்கனவே இந்த சாலை தார் ரோடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சூரிய பிரகாஷ், பொள்ளாச்சி மேற்கு.

Comments

Unknown said…
இதுபோன்ற சாலைகளால் பெரும் விபத்துக்கள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன இதை உடனடியாக அதிகாரிகள் கவனிக்க வேண்டும்
Unknown said…
இதுபோன்ற சாலைகளால் பெரும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் நிறைய உண்டு இதை உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிக்க வேண்டும்