சுங்கச்சாவடி வரி இனி கிடையாது: அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

  -MMH

    சென்னை: சுங்கச்சாவடிகளில் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு பின்னர் சுங்கவரி வசூல் செய்யப்படாது சட்டசபையில் அமைச்சர் எ.வ வேலு அவர்கள் அறிவித்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் சுங்கவரி வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் மட்டும் சுங்கவரி வசூல் செய்யப்படுவது நிறுத்தப்படுவதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதால் பெருங்குடி, துரைபாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் ஆகிய சாலைகளில் உள்ள சுங்கச் சாவடியில் வசூல் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாலாஜி தங்கமாரியப்பன், சென்னை போரூர்.

Comments