கோவை செட்டி வீதி பகுதியில் தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் இலவச தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது !!

 

-MMH

    கோவை மாவட்டத்தில் கோவிட் அதிகமானதால் தடுப்பூசி அதிகமாக தேவைபட்டன. இந்த நிலையில்  கோவையில்  முகாம்களும் அதிகபடுத்தப்பட்ட நிலையில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை செட்டி வீதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் மண்டபத்தில் கோவை தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் 8 வது தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் தங்க நகைத் தொழில் சார்ந்த வியாபாரிகள் பொற்கொல்லர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கொரானாவில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம், தங்கள் சங்கத்தின் மூலம் இதுவரை 7463 பேருக்கு தடுப்பூசி போடடப்பட்டிருப்பதாக கூறினார்.  

மேலும் 15,000 பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளதாக கூறிய அவர் முதலமைச்சரின் சீரிய முயற்சியால் இந்த கொரானா தடுப்பூசி முகாம்கள் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சபரிநாத், எல்லப்பன், ஸ்ரீநிவாசன், தேவா, பிரகாஷ், மனோகர், ராம்பிரகாஷ், அம்மா வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments