சிங்கம்புணரியில் பேரறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாள் விழா! திமுகவினர் உற்சாகம்!

 

-MMH

       1949ல் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த, 1967ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் "சென்னை மாகாணம்" என்றிருந்ததை "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்டிய, சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கிய, இந்திய மாநிலங்களில் தனித்துவமான இருமொழிக் கொள்கையை வகுத்து தமிழ்நாட்டிற்குத் தந்த பேராசான் பேரறிஞர் அண்ணா அவர்களின் 113வது பிறந்தநாளை சிங்கம்புணரியில் திமுகவினர் வெகு விமரிசையாக கொண்டாடினர்.

இன்று காலை திமுகவினர் அண்ணாமன்றத்திலிருந்து இரு வண்ணக் கொடி ஏந்தி ஊர்வலமாக சென்று பேருந்து நிலையம் முன்புறம் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்ததனர். அண்ணாவை வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதன் பின்பு சாலையில் பயணித்த அனைத்து பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிங்கம்புணரி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பூமிநாதன், மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பூரண சங்கீதா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அம்பலமுத்து மற்றும் சோமசுந்தரம், ஒன்றிய திமுக துணைச் செயலாளர் சிவபுரி சேகர், 

TAPCMS துணைத்தலைவர் இந்தியன் செந்தில், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், நகர அவைத்தலைவர் காந்திமதி சிவகுமார், நகர பொருளாளர் கதிர்வேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் அருண், அலாவுதீன் யாகூப், சி.பூமிநாதன், குமரிபட்டி கணபதி, கேபிள் சாதிக் எஸ்.எஸ்.இப்ராஹிம் மற்றும் ஏராளமான திமுகழக முன்னணியினர் கலந்து கொண்டனர்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments