பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்! சிங்கம்புணரியில் அதிமுகவினர் உற்சாகத்துடன் கொண்டாட்டம்!

 

-MMH

    அறிவுலக பேராசான், பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழா தமிழ்நாடெங்கும் பேரெழுச்சியுடன் இன்று கொண்டாடப்பட்டது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அதிமுகவினர் இன்று காலை ஊர்வலமாக வந்து, பேருந்து நிலையம் முன்பாக உள்ள அண்ணா சிலைக்கு மாலை இட்டனர். வாழ்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டு, அதன் பின்னர் கலைந்து சென்றனர்.


இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள், அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.திருவாசகம், பேரூர் கழகச் செயலாளர் சொ.வாசு, தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.ஜெகன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் R.பிரபு, ஒன்றிய குழுத்தலைவர் திவ்யாபிரபு, மாவட்ட பொறுப்பாளர்கள் சசிக்குமார், ஸ்டாலின் கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்தின், எம்.ரஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் முத்தன், தமிழரசு, முன்னாள் நகர செயலாளர் பெரி.மைலன்,

ஒன்றிய கவுன்சிலர்கள் மாது இளங்குமார், பேரூராட்சி பொறுப்பாளர்கள் தவமணி, குணசேகரன், முத்துமுகமது, பாரதி, எம்ஜிஆர் மன்ற ரவீத்திரன், கூட்டுவு சங்க தலைவர்கள் சுவேந்திரன், முத்துக்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் சதீஷ்குமார், கக்கன் ராஜா, ரேவதி மணிவண்ணன், மகளிரணி தவச்செல்வி, வார்டு செயலாளர்கள் நல்லதம்பி, லெட்சுமணன், சுப்பிரமணி, இளஞ்சேரன், தேசிங்கு, காசிலிங்கம், தனபாக்கியம், குமார், பாலாறு கணேசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

-அப்துல்சலாம்.

Comments