பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் வ.உ சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.!!

  -MMH

   பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் கோவையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு மரியாதை செலுத்தப்பட்டது. 

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாரின் பிறந்த நாள் விழா மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்தாண்டும் அவரின் 150-ஆவது பிறந்தநாளை ஒட்டி கோவை மத்திய சிறைச்சாலையின் முகப்பில் அமைந்துள்ள, வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்குக்கு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அதன் நிறுவன தலைவர் ரபீக் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அத்துடன்  அங்குள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரபீக் அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வரும்போது புது பாலத்திற்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாரின் பெயரை வைத்து அவரை கவுரவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

- சீனி,போத்தனூர்.

Comments