கொரோனா நோய்த்தடுப்பு கோவிட் -19 இலவச தடுப்பூசி முகாம்..!!

  -MMH

    திருவல்லிக்கேணி: உயிர்க்கொல்லி தொற்று  நோயான கொரோனா முழுவதும்  முடிவடையாமல் இன்னும் உலகத்திற்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.

இன்னும் சரியான மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில் இந்த நோயிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே வழியாக உள்ளது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் 18 வயதுக்கு மேல் பூர்த்தி அடைந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் நிகழ்வாக திருவல்லிக்கேணி சட்டமன்றத்திற்கு உட்பட்ட 114 வது வட்டத்தில்  திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்  கொரோனா இலவச தடுப்பூசி முகாம் இன்று(07.09.21) நடைபெற்று வருகிறது . இந்நிகழ்ச்சியை 114 வட்ட திமுக செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் ஏற்பாடு செய்தார். இதில் திரளாக மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அப்துல் ரஹீம், திருவல்லிக்கேணி.

Comments