மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும்!! - சுகாதார அலுவலர் எச்சரிக்கை!!

   -MMH

   வேலூர் பேருந்து நிலையத்தில் முகக் கவசம் வழங்கி நோய் தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!!

  வேலூர் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு பேரில் பழைய பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கும் மற்றும் பேருந்து நடத்துனர்களும் இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு இலவசமாக வழங்கி இனிமேல் வரும் போது தவறாமல் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்றும் இல்லையென்றால் அபராதம் ரூபாய் 200 கட்ட நேரிடும் என்று அறிவுறுத்தப்பட்டு அனுப்பப்பட்டது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-P.ரமேஷ்,வேலூர்.

Comments