மொத்தம் 2,207 பட்டதாரி ஆசிரியர் பணி விண்ணப்பம்.. நாளை முதல் தொடக்கம்..! எப்படி விண்ணப்பிப்பது.? முழுவிபரம் இதோ..

  -MMH

   அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 2,207 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை எழுத செப்டம்பர் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 2,207 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நவம்பர் மாதம் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை இணையவழியாக நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை எழுத செப்டம்பர் 20ஆம் தேதிமுதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் கணினி சர்வர் பிரச்சினையால் செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்க முடியவில்லை எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் முதல் நிலை, கணினி பயிற்றுநர்கள் முதல் நிலை ஆகிய பள்ளிக் கல்வித் துறையில் காலியாகவுள்ள 2,207 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது.

மேலும், எழுத்துத் தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும் எனவும், அவற்றில் 50 விழுக்காடு மதிப்பெண்களை சிறுவர்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். அருந்ததியர் ஆதிதிராவிடர் வகுப்பினர் 45 விழுக்காடு மதிப்பெண்களும், பழங்குடியினர் 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றாலும் தகுதிபெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். எழுத்துத்தேர்வு கணினி மூலம் இணையதளத்தில் மட்டுமே நடைபெறும். விண்ணப்பங்களை http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம். இதன் மூலம் அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.

தேர்வுக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் 250 ரூபாய் கட்டினால் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக் கட்டணத்தை இணையதளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். விண்ணப்பப்பதிவு உள்பட அனைத்து நடைமுறைகளும் இணையதளம் மூலம் மட்டுமே நடைபெறும். விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட மாட்டாது, விண்ணப்பங்களை அனுப்பினால் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்றுக் கொள்ளாது. இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தேர்வு வாரியம் கூறியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு http://tn.nic.in/

-முகமது சாதிக் அலி.

Comments