அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பார்மலின் கலக்கப்பட்ட 270 கிலோ மீ்ன்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கபட்டது!!

  -MMH

   அத்தியாவசிய உணவான மீன்களின் தேவையினை சென்னை மக்களுக்கு பூர்த்தியாக்கும் காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை , நொச்சிக்குப்பம் மீன் சந்தையில் உணவு பாதுகாப்புத்துறையினரின் அதிரடி நடவடிக்கைகளினால் ரசாயணம் கலக்கப்பட்ட 270 கிலோ மீன்கள் அழிக்கபட்டன.

ஆந்திரா , கர்நாடகம் , கேரள மாநிலங்களில் பிடிக்கப்படும் மீன்கள் சென்னைக்கு விற்பனைக்காக வருவதற்கு முன் ஐஸ் கட்டிகளினால் பதப்படுத்தப்பட்டே வருகின்றன , ஆனால் அப்படி பதப்படுத்தபட்ட மீன்களின் தன்மையானது சில நாட்களுக்கே நல்ல நிலையில் இருக்கும் .

இந்நிலையில் அதிக நாட்கள் மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக சில வியாபாரிகளினால் பார்மலின் போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும் ரசாயனங்கள் உபயோகபடுத்தப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பார்மலின் கலக்கப்பட்ட 270 கிலோ மீ்ன்கள் சிந்தாதிரிப்பேட்டை , நொச்சிகுப்பம் பகுதியில் கைப்பற்றப்பட்டு அழிக்கபட்டது.

பார்மலின் என்பது வயிற்று பிரச்சனை முதற்கொண்டு கேன்சர் வரையிலான நோய்களை ஏற்படுத்தும் கடுமையான ரசாயனமாகும்.

-நவாஸ்

Comments