36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது!! டிஜிபி லைலேந்திரபாபு அறிவிப்பு!!

         -MMH

தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் 2-வது நாளாக 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி லைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சென்னை, தமிழகம் முழுவதும் பழிக்குப்பழி கொலைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக கூலிப்படைகள் மூலமாக தலையை துண்டித்து கொடூரமாக கொலைகள் நடந்து வருகிறது. திண்டுக்கல்லில் சமீபத்தில் பெண் தலை துண்டித்து பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் சென்னை உள்பட மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். 

அதன்பேரில்  தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 36 மணி நேரத்தில்  2,512  ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக  டிஜிபி  லைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.  மேலும் கைது செய்யப்பட்டவர்களில் 733 ரவுடிகள் கோர்ட்டு காவலில் சிறைக்கு அனுப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே 450 ரவுடிகள் கைதான நிலையில் திருவாரூரில் மேலும் 10, புதுகோட்டையில் மேலும் 5 ரவுடிகள் சிக்கினர். தமிழகம் முழுவதும் 2 நாளில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ரவுடிகளிடம் இருந்து 5 துப்பாக்கிகள், 934 அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

-வேல்முருகன், சென்னை.

Comments