திருப்பத்தூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! 3 பேர் படுகாயம்!

 

-MMH

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரது மனைவி அன்புச்செல்வி. இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரும் இவரது உறவினரான புதுக்காட்டாம்பூரை சேர்ந்த பழனி என்பவரது மகன் ராமகிருஷ்ணன் என்பவரும் பிரான்மலை சென்றுவிட்டு திருப்பத்தூரில் உள்ள அவர்களது இல்லம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் இந்திரா நகர் செல்லும் வழியில் திருப்புத்தூர் - சிவகங்கை சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே தங்களது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அதே நேரத்தில் சிவகங்கை மாவட்டம், தெக்கூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் சக்திவேல் என்பவர் சிவகங்கை சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக இருவரது இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில் மூன்று நபர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால் அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்மூலம் அவர்கள் மூவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் நகர் காவல் சார்பு ஆய்வாளர் சேவுக வீரைய்யா, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments