கோவை மாநகராட்சி 86 வது டிவிசனில் தரமற்ற பாதாள சாக்கடையை சீரமைக்க மனு!!

      -MMH

கோவை மாநகராட்சி 86 வது டிவிசனில் கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தரமற்ற பாதாள சாக்கடை பணிகளை சீரமைப்பது மற்றும் புதிதாக அமையவுள்ள பஸ் டிப்போவை இடமாற்றம் செய்வது தொடர்பாக அல் அமீன் ஐக்கிய ஜமாத் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாநகராட்சி ஆணையரிடம் மனு வழங்கப்பட்டது. கோவை அல் அமீன் ஐக்கிய ஜமாத் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அதன் நிர்வாகிகள் உபைதுர் ரஹ்மான், ஜாபர் சாதிக் மற்றும் பீர் முகம்மது ஆகியோர் தலைமையில், மாநகராட்சி ஆணையரிடம் மனு ஒன்று வழங்கப்பட்டது. 

மனுவில், கோவை மாநகராட்சி 86 வது வார்டிற்கு உட்பட்ட பகுதியான அண்ணா நகர், அல் அமீன் காலனி, ரோஸ் கார்டன், பிலால் எஸ்டேட், பொன்விழா நகர், அன்பு நகர் மற்றும் சில பகுதிகளில், பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இந்நிலையில் தற்போது மக்கள் அதிகமாக வசிக்க கூடிய எங்கள் பகுதி மக்கள் சென்று வரக்கூடிய அல் அமீன் காலனி புறம்போக்கு ஆக்கிரமைப்பு அகற்றப்பட்டு இதுவரை அங்கு தார்சாலை அமைக்காமலும் போலிஸ் பிக்கெட் அகற்றாமல் உள்ளது. 

மேலும் அந்த பகுதியில், கடைகள், வாகனம் நிறுத்தம் ஆகியவைகள் மூலம் ஆக்ரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால் அடுத்த வழி பாதையாக புல்லுக்காடு பகுதியைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். இங்கு வசிக்கக் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் தினம் சிரமத்தோடு ஆபத்தான முறையில் பயணிக்கும் வகையில் உள்ளது. மேலும் பொதுமக்களும் இந்த பாதையை பயன்படுத்தி இலகுவாக ஆத்துபாலம் செல்லக்கூடிய பகுதியாக உள்ளது. இங்கு மேலும் பழ மார்கெட், மீன் மார்க்கெட் புதியதாக தோன்றி இருக்கிறது. ஹவுசிங் யூனிட் மக்கள் வசித்து வருகிறார்கள்

மேலும் சூயஸ் குடோனும் அங்கு உள்ளது. இதற்கு மேலும் அப்பகுதியில் பஸ் டிப்போ அமைப்பதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இதனால் இப்பகுதி ஆபத்தான விபத்துகளும் அதிகம் ஏற்படக்கூடிய நிலையில் உள்ளது. மேலும் வாகனம் ஓட்டிகளுக்கு ஆபத்தாகவும், குழந்தைகளுக்கு ஆபத்தாகவும் இருப்பதால், பஸ் டிப்போவை வேறு இடத்திற்கு மாற்றவும், மேலும் கடந்த கால ஆட்சியின் போது செய்யப்பட்ட பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளில் செய்யப்பட்ட தரமற்ற பணிகளை சீர் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கப்பட்டது. இதில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஜாகீர் ஆசாத், உசேன், அன்பு, அபீப், சுலைமான், யூனுஸ், மீரான் சாகிப், அர்சத் மற்றும் பலர் உடனிருந்தனர்.

-சீனி, போத்தனுர்.

Comments