கள்ளுக் கடையில் திருட்டு மீனாட்சிபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை !!

 

-MMH

        பொள்ளாச்சி தமிழக கேரள எல்லைப் பகுதியான கோபாலபுரம் அடுத்த நெடும் பாறை மூலத்துறை அணைக்கட்டுப் பகுதியில் உள்ள கள்ளுக்கடை யில் நேற்று இரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து சமைக்க வைத்திருந்த சிலிண்டர் மற்றும் கேஸ் அடுப்பு மேலும் 10 லிட்டர் கள்ளு  திருடிச் சென்று விட்டனர் இந்நிலையில் கள்ளுக் கடைக்கு காலையில்  வேலைக்கு வந்த மணி,ஹரி,நடராஜ் உள்ளிட்டோர் வந்த பார்த்த பொழுது கள்ளுக்கடையின் மெயின் கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்பு இதுகுறித்து மீனாட்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளுக்கடையில்  திருட்டு போன சம்பவம் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Comments