சிங்கம்புணரி செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் மரம் நடும் விழா!

 

-MMH

     சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் (NSS) மூலம் மரம் நடும் விழா நடைபெற்றது. நேற்று நடந்த இந்த நிகழ்வை, சிங்கம்புணரி சேவுகா அரிமா சங்கமும், செயின்ட் ஜோசப் மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்தின.

விழாவில் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர், கணிதத்துறை பேராசிரியர் சுதா வரவேற்புரையாற்றினார். திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் அம்பலமுத்து தலைமை தாங்கினார். அரிமா சங்கத் தலைவர் கருணாகரன், செயலாளர் வெங்கடேஷ்பிரபு, பொருளாளர் சேதுபாண்டியன் மூவரும் சிறப்புரையாற்றினர்.

முதல் நிகழ்வாக, 'நெருப்பில்லா சமையல்' எனும் நிகழ்ச்சி கல்லூரி மாணவிகளால் நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் சிறப்பாகவும், வித்தியாசமாகவும் உணவு வகைகளைத் தயார் செய்த மாணவிகள் சீதாலெட்சுமிக்கு முதல்பரிசும், பொன்.சாருமதிக்கு இரண்டாம் பரிசும், ஹசீனாபானுக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக சேவுகா அரிமா சங்கம் மற்றும் செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரி இணைந்து 40 க்கும் மேற்பட்ட மரகன்றுகன்றுகள் கல்லூரி ஆசிரியர்கள், சேவுகா அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவிகளால் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டது. நிறைவாக  செயிண்ட் ஜோசப் மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர், முனைவர்.மார்கரெட் பாஸ்டின் நன்றி கூற இனிதே நிறைவுற்றது.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments