சுந்தராபுரம் பகுதியில் உடைந்து கிடக்கும் குடிநீர் குழாய்! குடிநீர் பிடிக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் பொதுமக்கள்!! கண்டு கொள்வார்களா துறை அதிகாரிகள்?

  

-MMH

     கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் வீதியில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்தப் பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன மேலும் இந்த பகுதியை சுற்றியுள்ள இடங்களில் இருந்தும் இங்கு வந்து தான் குடிநீர் எடுத்து செல்கிறார்கள். இங்கு குடி தண்ணீர் பிடிக்க பொதுமக்கள் எப்பொழுதும் காத்துக் கொண்டிருப்பார்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பிடிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது மேலும் அந்த பகுதி சுகாதாரம் இல்லாமல் குப்பைகளும் காகிதங்களும் விழுந்து காணப்படுகிறது. இந்த குடி நீரை நம்பி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பகுதியை சுற்றிலும் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே இந்த துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஊழியர்களும் இதை விரைவில் சரி செய்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலரும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments