வரும் ஆனா வராது..!! ஆன்லைன் ஆர்டர் செல்போன்கள் அபேஸ்..!!

 


-MMH

            கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் போலி ஆவணங்கள் தயாரித்து 49 செல்போன்களை திருடிய 2 கொரியர் ஊழியர்கள். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை. கோவை சிங்காநல்லூர் பகுதியில் இயங்கிவரும் ஈகாம் எக்பிரஸ் கொரியர் நிறுவனத்தில் சண்டேஸ்வரர், பார்த்திபன் ஆகிய இருவரும் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் கொரியர் நிறுவனத்துக்கு வரும் அமேசானுக்கு சொந்தமான சுமார் 4,49,000 ரூபாய் மதிப்புள்ள 49 செல்போன் பார்சல்களை போலி ஆவணங்களை தயாரித்து திருடி உள்ளதாக தெரிகிறது. இதை தெரிந்து கொண்ட ஈகாம் எக்ஸ்பிரஸ் மேலாளர் சிங்கநல்லூர் காவல்நிலையத்தில் இதைப்பற்றி புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைனில் பணம் செலுத்தி செல்போன்கள் ஆர்டர் செய்த நபர்கள் சிலர் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் ' வரும் ஆனா வராது ' என்ற  பாப்புலர் டயலாக்க்கு இணங்க  தங்களுக்கு செல்போன் வருமென்று காத்துக் கொண்டே இருக்க வேண்டியது தான் ஆனால் வராது என்பதுதான் உண்மை.

நாளைய வரலாறு செய்திக்காக

-முஹம்மது சாதிக் அலி.

Comments