பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணை நிரம்பியது..!!

  -MMH

   கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

நேற்று பரம்பிக்குளம் பகுதியில் 29 மி.மீ. மழை பெய்ததை அடுத்து அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 2,352 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, 2,085 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments