டிஜிட்டல் இந்தியாவில் டிஜிட்டல் விநாயகர்!!

      -MMH

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாலையோர விநாயகர் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக டிஜிட்டல் உண்டியல் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. நம் இந்திய திருநாட்டில் எவ்வளவு மக்கள் பிரச்சினைகளில் இருந்து கொண்டு இருந்தாலும் ஒன்றிய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் மட்டும் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவது என்பது நாம் அறிந்ததே. 

அதனடிப்படையில் பணப் பரிவர்த்தனைகள், பள்ளிக்கூட வகுப்புகள், அரசு சேவைகள் போன்றவைகள் எல்லாம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விட்டது. தற்போது திருப்பூரில் அமைந்துள்ள விநாயகர் கோயில் ஒன்றில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக டிஜிட்டல் உண்டியல் அறிமுகம் செய்துள்ளனர். பக்தர்கள் தங்கள் மொபைல் போனின் மூலம் கோவில் கம்பியில் தொங்க விட்டிருக்கும் QR ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்து தங்கள் காணிக்கையை செலுத்திக் கொள்ளலாம். ஆக மிக மிக அருமை இது போல எல்லா பக்கம் வந்துச்சுன்னா உண்டியல் திருட்டு பிரச்சினையே வராது என்று மக்கள் முணுமுணுத்துக் கொள்வது நமக்கு புன்னகை கலந்து ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

-பாட்ஷா, திருப்பூர்.

Comments