வாகன ஓட்டிகளை அலைக்கழிக்கும் வாளையார் சோதனைச் சாவடி! - கண்டுகொள்ளாத இரு மாநில சுகாதாரத்துறை..!!

  -MMH

    கொரோனா என்னும் கொடிய நோய் உலகையே புரட்டிப் போட்ட இந்த தருணத்தில் தமிழகத்தில் சில தளர்வுகள் உடன் பொது முடக்கம் இருக்கும் இந்த காலகட்டத்தில் அண்டை மாநிலமான கேரளம் கொரோனா பிடியிலிருந்து மீளாத நிலை தான் காணப்பட்டிருக்கிறது. அரசு மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் முக கவசம் அணிய வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ள நிலையில் இரு மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் ஒரு பகுதியான வாளையார் சோதனைச் சாவடி. இந்த சோதனைச்சாவடி தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு வரக்கூடிய வாகன ஓட்டிகளுக்கும் பெரும் சோதனையாகவே காணப்படுகிறது. ஏனென்றால் இந்த எல்லையை கடப்பதற்கு குறைந்தது அரைமணி, நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை, ஆவதாலும் நோயாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் அவசரமாக செல்ல வேண்டும் என்றால் கேள்விக்குறியாக இருக்கிறது. தினந்தோறும் மாநிலங்களிடையே பணிக்கு செல்வோர் அனைவருக்கும் பெரும் சோதனையான இந்த சோதனை சாவடி இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சரியான ஆவணங்கள் காண்பித்தாலும்  அவர்களுக்கு  சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.

தினந்தோறும் இந்த  எல்லையை கடக்கும் ஒரு சில நபர்கள் தங்களுடைய நிலையை எண்ணி மிகவும் மனம் உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சுகாதாரத்துறை சிறு வயதில் உள்ள அதிகாரிகளை நியமனம் செய்து வரும் வாகன ஓட்டிகளை சோதனை என்ற பெயரில் பெரும் வேதனைக்கு உட்பட நேரிட உள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் கூறி வருகின்றனர். தங்களது வாகனத்தில் சரிவர ஆவணங்கள் இருந்தாலும் இ பாஸ் மற்றும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டாலும் ஒரு மணி நேரம் வரை இந்த இடத்தில் செலவிடுவது வாகன ஓட்டிகள் இடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குறை கூறி வருகின்றனர்.

இதனை கவனத்தில் கொண்டு சுகாதாரத்துறையில் மாநிலங்களுக்கிடையே  இருக்கக்கூடிய இந்த சோதனைச் சாவடிக்கு சரியான அதிகாரிகள் நியமனம் செய்து வாகன ஓட்டிகளை சிரமத்துக்கு உள்ளாகாமல் அவர்களை அனுப்பி வைக்க வேண்டுமென்று வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 நாளைய வரலாறு செய்திகளுக்காக,

 தலைமை நிருபர், 

-ஈசா, அனஸ்.

Comments