மனிதநேயத்துடன் செயல்பட்ட போலீஸ்..!! பாராட்டிய கோவை எஸ். பி.செல்வ நாகரத்தினம்.!!

  -MMH

   கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்றாம்பாளையம் பிரிவு பகுதியில் கடந்த 2-ஆம் தேதி மூதாட்டி ஒருவர் நடந்து சென்றுள்ளார். அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த அந்த மூதாட்டியின் உடலை காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து அந்த மூதாட்டிக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பதை அறிந்த கிணத்துக்கடவு போலீஸ் ஏட்டு செல்வகுமார் மூதாட்டியின் உடலை வாங்கி சென்றுள்ளார். அதன்பின் அவர் பொள்ளாச்சி-உடுமலை சாலையில் இருக்கும் சுடுகாட்டில் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்துள்ளார். இதனை அறிந்த கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரதினம் செல்வகுமாரை நேரில் வரவழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments