திடீர் மழை..!! சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்.. குளிர்ச்சியால் மக்கள் ஆனந்தம்..!!

 

-MMH

    திருப்பூர் மாவட்டத்தில் வெப்ப சலனம் காரணமாக திடீரென பெய்த பெரும் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, குழிகளில் தண்ணீர் தேங்கி நின்றது, இருப்பினும் குளிர்ச்சியினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து. இன்று மதியம் சுமார் 1.30 மணி அளவில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது அரை மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையினால் சாலைகள் எங்கும் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது, குழிகள் அனைத்தும் மழை நீரால் நிரம்பியது, மழை நீரோடு சாக்கடை நீரும் கலந்து சாலையில் ஓடியதால் பாதசாரிகளும், இரு சக்கர வாகன  ஓட்டிகளும் மிகவும் அவஸ்தைக்கு உள்ளாகினர். இருப்பினும் மழையினால் குளிர்ந்த வெப்பம்  நிலவியதால்  மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்..

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா, திருப்பூர்.

Comments