போத்தனூரில் அனைத்து கட்சியினரையும் அழைத்து துணை ஆணையர் அறிவுரை..!!

 

-MMH 

    கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் இன்று காலை லட்சுமி கல்யாண மண்டபத்தில் அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்த காவல் துணை ஆணையர்.

மக்கள் வசிக்கும் பகுதிகளில் புதிதாக கொடிக்கம்பங்கள் அமைக்கக்கூடாது. என்றும் ஏற்கனவே அந்த பகுதியில் இருந்த கொடிக் கம்பங்களுக்கு  மட்டும் அனுமதி உள்ளதாகவும் சுவரொட்டிகளை பயன்படுத்தும் பொழுது மருத்துவமனை பகுதிகள் காவல்துறை சாலை தடுப்புகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அரசு பள்ளிகள் தனியார் இடங்களில் ஒட்டக் கூடாது என்றும்  பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகளை ஒட்ட கூடாதென்றும் அறிவுரை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் போத்தனூர் காவல் ஆய்வாளர் கலந்து கொள்வதோடு காவல்துறை ஆணையர் கூறுவதை பின்பற்ற வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் சட்டப்படி வழக்கு போடப்படும் என்றும்  அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அனைத்து கட்சியினரும் கலந்துகொண்டு துணை ஆணையர் அறிவுரையை ஏற்று அனைவரும்  சென்றனர். இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர்,  துணை ஆய்வாளர், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்களை துணை ஆணையர் பாராட்டினார். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக தமிழக தலைமை நிருபர்,

-ஈசா.

Comments