கண்டக்டருக்கு கத்திகுத்து!!

  -MMH

  கோவை தமிழக அரசு போக்குவரத்து கழக, உக்கடம் கிளையில் டிரைவராக மதுரையை சேர்ந்த ராமராஜ் (32) பணிபுரிந்து வருகிறார். இவருடன் அதே பணிமனையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த சதீஸ்குமார் (29) கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். 

நேற்று மாலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ராமராஜ், சதீஸ்குமாரை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த சதீஸ்குமார் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தை அறிந்த சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கத்தியால் குத்திய ராமராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments