வேலூர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் திருவிழா!!

    -MMH

வேலூர் நகரில் உள்ள அரசினர் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க வார விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பயிலும் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் குமரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அவர் குடற்புழு நீக்க மாத்திரைகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார் இதனை மாணவர்கள் பெற்றுக் கொண்டனர் இதேபோன்று ஓல்டு டவுன் பகுதியில் உள்ள வித்யா மந்திர் பள்ளியிலும் தடுப்பூசி சிறப்பு முகாம் அமைத்து அதனை பொதுமக்களுக்கு செலுத்துவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார் வேலூர் அணைக்கட்டு காட்பாடி கே வி குப்பம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் 2 கட்டமாக வழங்கப்படுகிறது இது மாணவர்களின் உடல் நலனை பேண பெரும் உதவியாக இருக்கும் என்பதால் இதனை பள்ளியின் சார்பில் சுகாதார துறையின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது இதில் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

-P.ரமேஷ், வேலூர்.

Comments