ஒரே வாரத்தில் ஏழு மின் மாற்றிகள் அமைப்பு! சிங்கம்புணரி மின்சார வாரியம் சாதனை!

 

-MMH

     சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சில இடங்களில் மின் பளு கூடுதலாகவும், சில இடங்களில் குறைந்த மின் அழுத்தமும் இருந்த பகுதிகளை சிங்கம்புணரி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்ததில், சிங்கம்புணரி நகரில் இரண்டு இடங்களிலும் மற்றும் பிரான்மலை, கல்லம்பட்டி, கரிசல்பட்டி, வாராப்பூர், ஆகிய இடங்களிலும் புதிய மின்மாற்றிகள் அமைக்கத் தேவை இருப்பது தெரியவந்தது.

எனவே, சுமார் முப்பத்தி ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஏழு புதிய மின் மாற்றிகள் ஒரே வாரத்தில் நிறுவி, உதவி செயற்பொறியாளரால் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிகழ்வுகளில் உதவிப் பொறியாளர்கள் பார்த்திபன், ராஜா, ஆனந்தகுமார், முத்துக்குமார் மற்றும் அணைக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், சிங்கம்புணரி ஜமாத் தலைவர் ராஜா முகமது, தொழிலதிபர் சிவக்குமார், பொது நல ஆர்வலர் கே.ஆர்.ஏ.கணேசன், காளாப்பூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வக்குமார் மற்றும் வர்த்தகர்கள், பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு போர்க்கால அடிப்படையில் செயல்பட்ட மின்சார வாரியத்துக்கு பாரட்டுக்களை தெரிவித்தனர்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments