மழைக்கு ஒதுங்க கூட இடமில்லை பொதுமக்கள் கவலை..!! அக்கறை காட்டுமா அரசு நிர்வாகம்..!!

-MMH

     கோவை மாவட்டம் வால்பாறையில் சில தினங்களாகவே கனமழை பெய்து கொண்டு வருகிறது. மழை நேரங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பள்ளி குழந்தைகளும் பொதுமக்களும் மழைக்கு ஒதுங்க இடமில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டு வருகின்றனர்.

வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள வாட்டர்ஃபால் எஸ்டேட்  வேவர் லி  எஸ்டேட், கவர்கள், தல நார், ரொட்டிக் கடை, புது தோட்டம் போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் மழை காலங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் போது மழை நேரங்களில் ஒதுங்க சரியான, பாதுகாப்பான  இடம் இல்லை என்று குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.


 அங்கிருக்கும் நிழல் கூடாரங்கள், நிழல்  கொடைகள் அனைத்தும் பழுதடைந்துள்ள நிலையில் உள்ளதாகவும் இதனால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளதாகவும், மேலும் வால்பாறை பழைய பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிற்கக் கூட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். அரசு நிர்வாகம் உடனே இதை கவனத்தில் கொண்டு மக்களின் பிரச்சனைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்போடு இருக்கின்றன..

நாளைய வரலாறு செய்திக்காக

-திவ்ய குமார், வால்பாறை.

Comments