பொள்ளாச்சி ஜோதி நகர் பகுதியில் உள்ள ரிசர்வ் பகுதியை யாரும் பயன்படுத்த கூடாது..!!

 

-MMH

     அங்கீகரிக்கப்பட்ட மனைபிரிவில் பொது உபயோகத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்த கூடாது,' என, குடியிருப்பு பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட மனுக்களில்.பொள்ளாச்சி ஜோதிநகர் 'டி' காலனி குடியிருப்போர் நலவாழ்வு சங்கத்தினர் கொடுத்த மனு,நகராட்சி, 35வது வார்டுக்கு உட்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற ஜோதிநகர் 'டி' காலனி மனைப்பிரிவில், மினர்வா பள்ளி அருகே, 27,900 சதுரடி இடம் நுாலகத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இடம் நகராட்சிக்கு இலவசமாக ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பொது கழிப்பிடமும், கோவிலும் கட்டப்பட்டுள்ளது.மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பின்பக்கம், 35.05 சென்ட் இடம் போலீஸ் ஸ்டேனுஷக்கு என, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 60 சென்ட் இடம் தீயணைப்பு நிலையத்திற்காகவும், அஞ்சல், தொலைபேசி நிலையத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடங்கள், அந்தந்த துறைகளில் ஒப்படைக்காமல், கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் வசமே உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட மனைபிரிவில் பொது உபயோகத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்த கூடாது. இந்த இடங்கள், அந்தந்த துறைகளிடம் ஒப்படைக்காமல்,பொது உபயோக பகுதிகளுக்கு வழிகாட்டி மதிப்பின்படி விலை கொடுக்க வேண்டும், என, கூறி கூட்டுறவு சங்கத்தினர் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்படுகின்றனர்.எனவே, பொது உபயோகப்பகுதிகளை அந்தந்த துறை வசம் ஒப்படைப்பு செய்ய கூட்டுறவு சங்கத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

மாவடப்பு செட்டில்மென்ட் பழங்குடியின மக்கள் கொடுத்த மனு,செட்டில்மெண்டில், 200 பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன. இங்கு பாரம்பரியமாக விவசாயம் செய்தல், ஆடு, மாடு ஆகிய கால்நடைகள் மேய்த்து குடும்பத்தை நடத்தி வருகிறோம்.வனத்துறையினருக்கு வழிகாட்டியாகவும் உள்ளோம். வனம், வனவிலங்குகள், வனத்துறைக்கு பாதுகாப்பாகவே இருந்து வருகிறோம்.இந்நிலையில், கடந்த, 15ம் தேதி ஆனைமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட நல்லார் காலனி அருகே மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்ற போது வனத்துறையினர் வழிமறித்து, மேய்ச்சலுக்கு கொண்டு போகக்கூடாது என கூறிவிட்டனர். கால்நடைகளுக்கும் உணவு கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆடு, மாடு மேய்ச்சலுக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments