பள்ளி குழந்தைகளுக்கு கபசுர குடிநீர்..!! பாராட்டுகளைப் பெறும் நகராட்சி அலுவலர்கள்..!!!

  -MMH

   கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று சற்று அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், அரசு தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக  வால்பாறையில் பள்ளிக்குழந்தைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் நகராட்சி நிர்வாகம் மூலமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருவது  குறிப்பிடத்தக்கது. நகராட்சி நிர்வாகத்தின் இந்த செயலை பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்யா குமார், வால்பாறை.

Comments