அடிப்படை வசதிகளில் பின்தங்கிய கிராமம்.. கவனிக்க வேண்டும்... அரசுக்கு மக்கள் கோரிக்கை..!!!

 

-MMH

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம், காஞ்சிரங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்டது சமாதானபுரம்  என்கின்ற கள்ளகுல கிராமம். இந்த கிராமத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் அடிப்படை வசதி கூட சரிவர இல்லை என்று அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.

குண்டும் குழியுமான  மேய்ச்சல் பிராணிகள் கூட நடக்கமுடியாத நிலையிலுள்ள இச்சாலையில்  தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கிறது, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு மத்தியில் சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது. சாலையோர மின் கம்பங்களும் இன்னும் அமைக்கப்படாத நிலை காணப்பட்டு வருகிறது, இதனால் இரவு நேரங்களில் பெண்களும் குழந்தைகளும் வெளியே நடமாட அச்சப்பட்டு வருகின்றனர். 

15 ஆண்டுகளுக்கு மேல் பலதடவை பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டும்  எந்த முன்னேற்றமும் இன்றி இந்நிலையே  நீடிப்பதாகவும், இனியும் தாமதிக்காமல் அரசு நடவடிக்கை எடுத்து உடனடியாக மக்களின்  இவ் அத்தியாவசிய  தேவைகளை நிறைவேற்றி தரவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக திருச்செங்கோடு 

-ரஞ்சித் குமார்.

Comments