சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் மூலிகை மரக்கன்றுகள் வழங்கும் விழா!!

      -MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவப் பிரிவு சார்பாக, 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் பிரபாகரன் அறிவுரைப்படி, 'மக்களைத் தேடி இந்திய மருத்துவம்' என்ற திட்டத்தின் கீழ் மூலிகை மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில், சிங்கம்புணரி தாலுகா தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் மரு.ஜீவஜோதி தலைமை தாங்கி பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். உதவி மருத்துவ அலுவலர் ரஹீமாபானு மூலிகை செடிகளின் பயன்கள் பற்றி விளக்கினார்.

47 பயனாளிகளுக்கு வேம்பு, மலைவேம்பு, சிறு நெல்லி, பெரு நெல்லி, கற்றாழை, மஞ்சள், இஞ்சி, வெற்றிலை போன்ற மூலிகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மருந்தாளுநர் வேலுநாச்சியார், பணியாளர் தயானப்பிரபு மற்றும் மருத்துவமனை  ஊழியர்கள் பங்கேற்றனர்.

- அப்துல்சலாம்.

Comments