எம்பி அதிரடி! புகார் கொடுத்தவுடன் ஆய்வு! மகுடஞ்சாவடியில் பரபரப்பு!!

  -MMH

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் கொரானா மெகா தடுப்பூசி முகாமைத்  தொடங்கி வைக்க நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஏகேபி.சின்ராஜ் அவர்கள் வருகை தந்தார்.

எம்பி வருகையை அறிந்து அங்கு வந்த பொதுமக்கள் அளித்த புகாரை உடனே ஆய்வுக்கு எடுத்த நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஏகேபி.சின்ராஜ் அவர்கள் கனககிரி என்ற பகுதியில் இருந்து கூடலூர் வரை புதிதாக அமையவுள்ள சாலையின் கரைப்பகுதி மற்றும் சாலை ஜல்லியை முழுமையாக ஆய்வு செய்து தரமற்ற சாலையை அமைத்துவந்த ஒப்பந்ததாரரை உடனே மாற்றிட உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில் மேலாண்மை முகமை (அட்மா) திட்ட குழு தலைவர் க.பச்சமுத்து, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.அன்பழகன், மகுடஞ்சாவடி அ.கண்ணன், த.சுரேஷ்குமார், சங்ககிரி கோட்டாச்சியர், சங்ககிரி வட்டாச்சியர், மகுடஞ்சாவடி வட்டார வள அதிகாரிகள், பொறியாளர்கள், மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அதிகாரி ஆகியோர் இந்த ஆய்வு பணியில் உடனிருந்தனர்.

எம்பியின் இவ்வதிரடி ஆய்வு  மகுடஞ்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதுடன், அவரது உடனடி நடவடிக்கை மக்கள் மத்தியில் மிகுந்த  வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

-Ln இந்திராதேவி முருகேசன், மகுடஞ்சாவடி கலையரசன்.

Comments