கோவை, சேரன் மாநகரில் சிறப்பு ஆதார் முகாம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!!!

-MMH

      கோவை சேரன் மாநகரில் நேற்று சிறப்பு ஆதார் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர். சேரன் மாநகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சிறப்பு ஆதார் சேவை  முகாம் நேற்று நடைபெற்றது, இந்த முகாமில் ஆதார் அட்டை இல்லாத 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும்  புதிய ஆதார், ஆதாரில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், அலைபேசி எண் இணைப்பு மற்றும் மாற்றம் போன்ற சேவைகள் செய்யப்பட்ட தந்தது. 

இதில் சேரன்மாநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியிலுள்ள  ஏராளமான குழந்தைகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்த சிறப்பு முகாமுக்கான  ஏற்பாடுகளை திமுக பொறுப்பாளர் திரு செல்வராஜ் அவர்கள் செய்து தந்தார். ஆதார் சிறப்பு சேவை முகாம்  இன்றும் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக

-முஹம்மது சாதிக் அலி.

Comments