அம்மா இப்ப வந்தர்றேன்... சொல்லிட்டு போனா மகள் வீடு திரும்பல... பதறியடித்து தாய் போலீசில் புகார்..!!

-MMH

    கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் மருந்தகத்திற்கு சென்ற பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் மெஹராஜ் இவரது மகள் ஜெசிமா வயது 16 காந்திபுரம் மாநகராட்சிப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று வீட்டில் ஆன்லைன் கிளாசை முடித்துவிட்டு மருந்து கடைக்கு செல்வதாக தன் அம்மாவிடம் கூறிவிட்டு  வெளியே சென்றிருக்கிறார். வெகுநேரமாகியும் மகள் ஜெசிமா வீடு திரும்பாததால் கலக்கம் அடைந்த தாய் மெஹராஜ் வெளியில் சென்று அவரைத் தேடி உள்ளார் ஆனால் மகளை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதனால் பதட்டமும் அதிர்ச்சியும் அடைந்த மெகராஜ் கோவை கிழக்கு மண்டல அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரைப் பெற்றுக் கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதோ இப்ப வந்தர்றேன்ம்மா  சொல்லிட்டு போன தன்  மகளை காணவில்லையே என்ற அதிர்ச்சியில் மகளை எப்படியாவது கண்டுபிடித்து கொடுங்கள் என்று கலக்கத்துடன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்காக

- முஹம்மது சாதிக் அலி.

Comments